×

கடைசியாக இதுதான்.. இனி மாட்டேன்... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமீர்கான்... 
 

பாலிவுட் ஐகான் அமீர்கானின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் ரசிகர்கள் செம அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
 
 
கடைசியாக இதுதான்.. இனி மாட்டேன்... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமீர்கான்...

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இந்தி ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களுக்கு இவரை பிடிக்கும். லகான், தாரே ஜமீன் பார், தங்கல் படங்கள் அமீர்கானுக்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்தது. தற்போது லால் சிங் சதா படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 

கடந்த 14ந் தேதி அமீர்கான் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதற்கு நன்றி சொல்லும் விதமாக அமீர்கான் வெளியிட்ட பதிவு ஒன்று பலருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. அப்பதிவில்,  “எனக்கு பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எனது மனது நிறைந்துவிட்டது. இன்னொரு செய்தியாக எனது கடைசி சமூக வலைத்தள பதிவு இது தான். சமூக வலைத்தளத்தில் என்னை ஆக்கிரமித்து கொள்வதாக கருதி இதிலிருந்து விலகிக்கொள்கிறேன்.

இருந்தும், முன்பிருந்தது போலவே தொடர்பில் இருப்போம். எனது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் ட்விட்டர் கணக்கு மூலம் வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News