×

அடையாளமே தெரியல....மீரா மிதுனா இது? - வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். 
 

எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதை பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்வில் சாதித்த பெண்கள் #SheInspiresUs என்கிற ஹேஷ்டேக்கில் தகவல்களை பகிரும் படி மோடி கூறியிருந்தார். எனவே, இந்த புகைப்படங்களுக்கு அந்த ஹேஷ்டேக்கையும் மீரா பயன்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News