×

இவள்தான் என் இளவரசி...! வைரலாகும் ஜி.வி.பிரகாஷ் மகள் புகைப்படம்....

வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். அதன்பின் பின்னணி பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளரான அவர் பென்சில் மற்றும் டார்லிங் திரைப்படங்கள் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 

இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த சைந்தவிக்கு அண்மையில்  தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டின் ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்பட்டது. 

இன்று காலை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி மற்றும் மகளுடன் பிரபல நாளிதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு எங்க "முதல் ஃபேமிலி ஃபோட்டோ" என்று கூறி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது மகளின் மேலும் ஒரு அழகான புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் அவரின் மகள் அன்வி மிகவும் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த திரைத்துறையினர் மற்றும் நெட்டிசன்கள் ‘சோ க்யூட்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Here is my princess #Anvi ... @saindhavi_prakash @bhavanisre ... photo by @mommyshotsbyamrita

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on

From around the web

Trending Videos

Tamilnadu News