×

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! மாஸ்டர் பிளானை செயல்படுத்திய ரஜினி : பின்னால் இருப்பது அவரா?..

நடிகர் ரஜினி சில திட்டங்களின் படியே தனக்கு முதல்வர் பதவியில் விருப்பமில்லை எனவும், எழுச்சி ஏற்பட்ட பின் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ரஜினி தனக்கு முதல்வர் ஆசையில்லை எனவும், தனக்கு நேரடி அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் பகீரங்கமாக தெரிவித்தார். மேலும், தான் வெற்றி பெற்றால் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும், தகுதியான ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைப்பேன் எனக்கூறினார். 

அதோடு, தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்  மட்டுமே நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி பேசினார்.அவரின் இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரின் மாவட்ட செயலாளர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இந்நிலையில், ரஜினி இப்படி பேசியதற்கு பின்னணியில் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு இப்போது ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பவர் தந்தி தொலைக்காட்சியில் கருத்துக்கணிப்பு குறித்து பாண்டேவுடன் உரையாடும் அருண் கிருஷ்ணமூர்த்திதான். 

நேரடியாக அரசியலில் இறங்கினால், இந்த சூழலில் எல்லா அரசியல்வாதிகள் போல ஆகி விடும் என்பதால், முதல்வர் பதவி வேண்டாம் என்பதை முதலில் அறிவித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சர்வே எடுப்போம். அதில் நீங்கள் அரசியலில் உடனடியாக இறங்காமல் இருப்பதும், முதல்வர் பதவி வேண்டாம் என்று அறிவித்ததிலும் மக்கள் கடும் ஏமாற்றமடைந்திருப்பது சர்வேயில் தெரிய வருகிறது என்று முடிவுகளை வெளியிடுவோம். 30 நாட்களுக்கு பிறகு இந்த சர்வே முடிவுகள் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியாவில் வெளியிடப்படும்.

அதை ஏற்று, நீங்கள், மக்கள் விரும்புவதால் முதல்வர் பதவி வேண்டாம் என்று நீங்கள் கூறிய நிபந்தனையை தளர்த்துவதாக அறிவித்தால் உங்களுக்கு அமோகமான ஆதரவு கிடைக்கும் என்று ரங்கராஜ் பாண்டேவும், அருண் கிருஷ்ணமூர்த்தியும் சொன்னதன் அடிப்படையில் ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் சாணக்கியாவில் சர்வே வந்த பிறகு, மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் விபரம் அறிந்த சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது இது நடந்த பின்னரே தெரிய வரும். 

From around the web

Trending Videos

Tamilnadu News