×

பாண்டிராஜ் ரசிகர்களுக்கு கொடுத்த பிறந்தநாள் கிப்ட் 
இதுதான்....

 
pandiraj

பாண்டிராஜ் தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர். அதுமட்டுமல்ல அமைதியான இயக்குனரும் கூட. எவ்வளவு ஹிட்டான படங்களைக் கொடுத்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் போல எடுத்து சாதித்து காட்டுவார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இவர் சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தார்.

சசிகுமார் தான் பசங்க திரைப்படத்தை தயாரித்து அதன் இயக்குனர் பொறுப்பை பாண்டிராஜூக்கு கொடுத்தார். 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் தான் அது. மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறுவர்கள் செய்யும் சேட்டைகளை பள்ளிப்பருவத்தில் நாமும் செய்வது போல் அழகாக சித்தரித்துக் காட்டியிருப்பார் பாண்டிராஜ். இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. தனது முதல் படத்திலேயே சிறந்த வசனத்திற்கான தேசிய விருதைப் பெற்றது பலரது புருவத்தையும் உயர்த்தி விட்டது. 

அடுத்து 2010ல் அருள்நிதியை  வைத்து வம்சம் திரைப்படமும்இ சிவகார்த்திகேயனை கதாநாயகனாக நடித்த மெரினா திரைப்படமும் இயக்கினார். இந்தப்படத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகம். இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார். அடுத்து கேடிபில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்து மாபெரும் வெற்றியைத் தந்தார். சூர்யாவின் பசங்க 2 படத்தில் இக்கால சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை சொல்லியுள்ளார். சிம்புவை வைத்து இதுநம்மஆளு படத்தை இயக்கினார். அதுவரை மென்மையான படங்களையே எடுத்து வந்த பாண்டிராஜ், அதிரடியாக விஷாலை வைத்து ஆக்ஷன் படம் எடுத்தார். அதுதான் கதகளி. 

கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்தார். இதில் அக்கா-தம்பி பாசத்தையும், தாய்மாமனின் அரவணைப்பையும் காட்சிப்படுத்தியிருப்பார். 

தனது பிறந்தநாளை முன்னிட்டு (7.6.2021) இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தான் இயக்கி வரும் சூர்யா 40 படத்தின் புதிய அப்டேட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொடுத்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் பாண்டிராஜ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், 

சூர்யா 40 படம் 35 சதவீதம் முடிஞ்சுது. எடுத்தவரை படம் நல்லாவே வந்துருக்கு. லாக்டவுன் முடிஞ்சதும் பண்ண வேண்டியதுதான். அவர் டீம் ரெடி. டைட்டில் மாஸா ப்ரீ அனௌன்ஸ்மண்ட்டோடு வரும். ஜூலை வரை டைம் கொடுங்க ப்ளீஸ்...என்ற டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லாத குடும்பப்பாங்கான படங்களையே இயக்கி வருகிறார் என்பது அனைவரும் பாராட்டத்தக்க விஷயம். 

From around the web

Trending Videos

Tamilnadu News