Categories: Cinema News latest news

அடேய் அப்புரசட்டிங்களா உங்க வேல தானா இது… இவங்க ஐடியாவில் தான் லியோ ஆடியோ ரிலீஸே கேன்சலா?

Leo Audio: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்துக்கு முதல்முறையாக ஆடியோ ரிலீஸே இல்லாமல் படம் வெளியாக இருக்கிறது. அது ஏன் விஜயிற்கு மட்டும் எப்போ பாரு பிரச்னை என பலரும் கொக்கரித்து கொண்டு இருக்கும் நிலையில் இதன் பின்னால் இருக்கும் ஒரு அரசியலே கசிந்து இருக்கிறது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம் இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். நா ரெடி என முதல் பாடல் ரிலீஸாக பட்டி தொட்டியெங்கு பரவியது.

இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..

இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தான் ரொம்பவே தாமதமானது. ஒருவழியாக நேற்று படக்குழு அந்த பாடலையும் வெளியிட்டது. கிட்டத்தட்ட  பல பெரிய புள்ளிகளுக்கு பதிலடியாக இந்த பாடலில் சில வரிகள் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை செம குஷியாக்கி இருக்கிறது.

இந்நிலையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்காமல் போனதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் என ஒரு தகவல் கசிந்துள்ளது. முதலில் நேரு விளையாட்டு அரங்கு அனுமதியை வாங்கியதும் காவல்துறை அனுமதி பெறவே இல்லையாம். 

பல நாட்கள் தாமத்திற்கு பின்னரே கடைசி நேரத்தில் காவல்துறையிடம் அனுமதி கேட்க அவர்கள் கொடுக்கவில்லையாம். அவர்களும் பாதுகாப்பு இதை போன்ற விஷயங்களுக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் கடைசி நேரத்தில் அனுமதி கேட்டப்போது மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: முதல் அடியே மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.!. ஜெய்லரின் அந்த சாதனையை காலி செய்த லியோ..!

இதையடுத்தே பெருந்தன்மையாக ரத்து செய்வது போல ஒரு பிம்பத்தினை லியோ தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி விட்டது. ஆனால் லேட்டாக்கியதே ஒரு யுத்தி தானாம். விஜயே மேடையில் ஏறி பேசி இருந்தால் கூட கிடைக்காத விளம்பரம் ரத்து செய்தால் கிடைக்கும். 

விஜயை ஒடுக்கிறார்கள் எனக் கூறியே படத்தினை ஓட வைத்து விடலாம் என்ற ஐடியாவில் தான் நிகழ்ச்சியை நடத்தவே வேண்டாம் என முன்கூட்டியே ஐடியா செய்து கடைசி நேரம் வரை இழுத்தடித்து இருந்தனர். அதையடுத்து கடைசியில் ரத்து என்றதும் அவர்கள் நினைத்தது போலவே விஜயிற்கு ஆதரவு பெருகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily