×

90களில் தமிழ்சினிமாவில் கோலூச்சிய மகாநடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் இவர்தான்....

தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டு தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றார். திரைப்படம் ஓட நாயகன் முக்கியமல்ல...வலுவான கதை தான்  முக்கியம்  என நிரூபித்துக் காட்டினார். 
 

தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டு தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றார். திரைப்படம் ஓட நாயகன் முக்கியமல்ல...வலுவான கதை தான்  முக்கியம்  என நிரூபித்துக் காட்டினார். 

அவர் வேறு யாருமல்ல. நம்ம ராஜ்கிரண் தான்.  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தான் இவரது சொந் ஊர். 

கிராமிய மனம் கமழ தமிழ்சினிமாவை இளையராஜாவுடன் கைகோர்த்து தாலாட்டினார். 90 களில் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டு வந்த முத்திரை பதித்தார்.  நடிகர்...தயாரிப்பாளர் ...இயக்குனர்  என அவதாரங்களை எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். 

அவற்றுள் சில....படங்களைப் பார்ப்போம்.

என்னெப் பெத்த ராசா

Ramarajan

ராஜ்கிரண் தயாரிப்பில் 1989ல் வெளியான முதல் படம். ராமராஜன் ...ரூபினி நடித்த படம். இளையராஜாவின் இசையில் சிராஜ் இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ராசாவே உன்னை நம்பி

1998ல் இவரது தயாரிப்பில் வெளியான படம் ராசாவே உன்னை நம்பி. ராமராஜன்...ரேகா நடித்த படம். இளையராஜாவின் இசையில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. கம்மாக்கரை ஓரம்....ராசாத்தி மனசிலே போன்ற மனது மறக்காத பாடல்களைக் கொண்ட படம் இது.

என் ராசாவின் மனசிலே

1991ல் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரன் தயாரித்து கதாநாயகனாக நடித்த முதல் படம். மீனா கதையின் நாயகியாக நடித்தார். வைகைப்புயல் வடிவேலு அறிமுகமானார். இசை மேதை இளையராஜா பாடல்களுடன் படம் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.

அரண்மனைக்கிளி

Rajkiran

தான் நடித்து தயாரித்த அடுத்த படம் அரண்மனைக் கிளி. 1993 ல் வெளியான இப்படம் தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றது. இசைஞானியின் இசையில்  அடி பூங்குயிலே...என் தாயென்னும் கோவிலை...போன்ற பாடல்களை அப்போது முணுமுணுக்காத இளைஞர்களே இருக்க முடியாது. படம் 100 நாட்களைக் கடந்து  மாபெரும் வெற்றி பெற்றது. அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடிய படம் இது.

எல்லாமே என் ராசா தான் 

அடுத்தடுத்த வெற்றிகளுடன் களமிறங்கிய ராஜ்கிரண் 1995ல் தயாரித்து நடித்த படம் எல்லாமே என் ராசா தான். சங்கீதா...ரூபாஸ்ரீ நடித்த படம். இளையராஜாவின் இசையில் ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே...பாடல் சூப்பர் ஹிட்டானது. நூறு நாட்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. 

கதையே தனது முதல் நாயகன் என்ற கொள்கையுடன் இருந்த இவர் கதைக்காக 2 வருடங்களுக்கு ஒருமுறையே படம் கொடுத்தார். சூதாட்டம் ஆடுவது...மது அருந்துவதால் உண்டாகும் கெடுதல்களை மையமாக கொண்டு தயாரித்த.இவரது படங்களால் பல்வேறு இளைஞர்கள் திருந்தினார்கள் என்றால் மிகையில்லை. அரண்மனைக்கிளியில் கோவில் திருவிழாவில் இவர் நள்ளி எலும்பைக் கடித்து ருசிப்பதை யாராலும் மறக்க முடியாது.

From around the web

Trending Videos

Tamilnadu News