×

இதுதான் இத்தாலியின் தற்போதைய நிலை – வாட்ஸ் ஆப் வீடியோ உண்மையா ?

உலகளவில் கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி பற்றி பல போலியான செய்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

 

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி உள்ளது. அநாட்டில் இதுவரை 5000 பேருக்கு மேல் வைரஸுக்கு பலி ஆகியுள்ளனர். இந்நிலையில் இத்தாலி நாட்டின் தற்போதைய நிலை இதுதான் எனக் கூறி வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் விமான நிலையத்துக்கு அருகில் நிற்கும் மக்கள் சிலர் மூச்சுவிட முடியாமக் கஷ்டப்படுவது, அலறிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் ஓடுவது என அச்சமூட்டும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை இப்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவானது கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் எடுக்கப்பட்டது. செனகலின் விமான நிலையத்தில் அவசரநிலை பயிற்சியாக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற போலியான வீடியோக்களை அதன் உண்மைத் தன்மை தெரியாமல் பரப்புவது மக்களை இன்னும் பீதிக்குள்ளாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News