×

எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது - மீனா!

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல ஹீரோவை சந்தித்த போட்டோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் மீனா. 

 

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்டோருடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கினார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பிரபல பாலிவுட் ஹீரோ ஹிரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், ''எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது. என் ஆல் டைம் ஃபேவரைட்டான ஹிரித்திக் ரோஷனை, அவரது திருமணத்துக்கு பிறகு நடந்த நிகழ்வில் சந்தித்தேன்'' எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மீனாவின் இந்த சூப்பர் நினைவு பதிவு, ரசிகர்களை கவர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News