×

இது என் மனதிற்கு நெருக்கமான படம் - இயக்குனர் செல்வராகவன்!

தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில்  விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்ட இவர் தன் ஒவ்வொரு படைப்புகளிலும் அவலங்களின் அழகையும்  அவமானங்களின் வெடிப்புகளையும் துணிவுடன் திரையில் கொண்டு வருபவர்.

 

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமையை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்து தொடர்ந்து 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் என பல வித்யாசமான வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக சிறந்து விளங்கி வருகிறார். திரைப்பயணத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன்  கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக சாணிக் காயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மயக்கம் என்ன படத்தின் காட்சியை பதிவிட அதற்கு செல்வராகவன்,  "இது என் மனதிற்கு நெருக்கமான படம். போட்டோகிராஃபி பிடிக்கும். புகைப்பட தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News