Connect with us
Sathyaraj

Cinema News

சத்யராஜ் சம்பளமே வாங்காம நடிச்ச படம இதுதானாம்… ஆனா அவரு அப்படி சொல்லலையே..!

புரட்சித்தமிழன் என்று தமிழ் சினிமா உலகில் போற்றப்படுபவர் நடிகர் சத்யராஜ். இவர் ரஜினி, கமல் ஆகியோருடன் வில்லனாக இணைந்து நடித்து பின் ஹீரோவானவர். தொடர்ந்து இன்று வரை பிசியாக இளம் நாயகர்களுடன் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் அது சத்யராஜ் தான். இவரது படங்கள் எல்லாமே செம மாஸாக இருக்கும்.

காமெடிக்குப் பஞ்சமே இருக்காது. இவர் அடிக்கும் லூட்டி அட்ரா சக்கை என்ற லெவலில் இருக்கும். கவுண்டமணி, மணிவண்ணனுடன் இவர் சேர்ந்து விட்டால் தியேட்டரே சிரிப்பால் களை கட்டும். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு இப்போது கூலி படத்தில் ரஜினியின் நண்பனாக நடிக்கிறாராம்.

படத்தை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் சம்பளமே வாங்காமல் நடித்த படம் ஒன்று உள்ளது. அது என்ன என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் வாசகர் ஒருவரின் கேள்விக்கு இப்படி பதில் அளித்துள்ளார்.

Periyar

Periyar

பெரியார் திரைப்படத்தில் நடித்ததற்காக சத்யராஜ் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பது உண்மை தான். அந்த படம் சம்பந்தப்பட்ட ஒரு விழாவில், பெரியார் நீண்ட நாளா அணிந்து இருந்த தங்க மோதிரத்தை சத்யராஜிக்குப் பரிசாக வழங்கினார் திராவிட கழக தலைவரான கி.வீரமணி.

அந்த மோதிரத்தைப் பொருத்தவரை, பெரியார் நீண்ட நாளா அணிந்து இருந்தார் என்பதால் அது விலைமதிப்பில்லாத மோதிரம். அப்படிப் பார்க்கும்போது அந்தப் படத்தில் நான் நடித்ததற்காக மிகப்பெரிய சம்பளத்தைப் பெற்றதாகத் தான் நான் உணர்கிறேன் என்று சத்யராஜ் சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… நான் பாடினது பிடிக்காம டி.எம்.சவுந்தர்ராஜனை பாட வச்சாங்க!.. எஸ்.பி.பி சொன்ன ரகசியம்…

2007ல் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான படம் பெரியார். சத்யராஜ், குஷ்பு, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் சத்யராஜ் பெரியாராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top