×

த்ரிஷா வாங்கிய முதல் சம்பளம் இதுதான்!...கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!..

 

பிரியதர்ஷன் இயக்கிய ‘லேசா லேசா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் திரிஷா. அதன்பின் படிப்படியாக உயர்ந்து முன்னணி கதாநாயகியாக மாறினார். அஜித், விஜய், சிம்பு, தனுஷ், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் மாடலாக இருந்தார், சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் விரும்பிய போது அவருக்கு கதாநாயகியின் தோழி வேடமே கிடைத்தது. எனவே, துணை நடிகையாக கும்பலோடு கும்பலாகத்தான் நிற்பார். பிரசாந்த், சிம்பன் நடித்த ஜோடி திரைப்படத்தில் கூட சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்.அப்போது அவர் பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு ரு.500 என்பதுதான் ஆச்சர்ய தகவல்.

தற்போது தான் நடிக்கும் திரைப்படத்திற்கு ரூ.1.5 கோடி வரை அவர் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News