Connect with us

Cinema News

மீண்டும் சேனாதிபதி எண்ட்ரி… இந்தியன்2 படத்தின் கதை இவருக்கு தானா? இணையத்தில் லீக்…

Indian2: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்2 படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் கதை குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஜெயமோகன், கபிலன் வைரமுத்து இணைந்து திரைக்கதை எழுத ஷங்கர் இயக்கும் திரைப்படம் இந்தியன்2. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயிண்ட் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்திலும் முதல் பாகத்தினை போல சுதந்திர வீரர் சேனாதிபதியாக கமல் நடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் 2019ம் ஆண்டு துவங்கினாலும் கோவிட், ஷூட்டிங்கில் நடந்த விபத்து என்ற பல காரணங்களால் இந்தியன்2 படம் ரிலீஸுக்கு இத்தனை வருடம் ஆகிவிட்டது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே பாரா என்ற முதல் சிங்கிள் வெளியான நிலையில் அடுத்த சிங்கிள் 29ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை12ந் தேதி இப்படத்தினை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறது. இப்படத்தினை ஓடிடி உரிமை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர் சேனாதிபதி ஹாங்காங்கில் இருக்கிறார். ஊழலுகள்  செய்யும் அரசியல்வாதிகள் குறித்து இணையத்தில் வீடியோவாக வெளியிடும் சித்ரா வரதராஜானாக நடிகர் சித்தார்த் நடித்துள்ளாராம். இவருக்கு உதவும் பொருட்டு சென்னை திரும்பும் சேனாதிபதி ஆடும் கதையாகவே இந்தியன்2 இருக்க போகிறதாம்.

Continue Reading

More in Cinema News

To Top