×

சக இயக்குனர்களுடன் வாட்ஸ் ஆப்பில் குழு ஆரம்பித்துள்ள இயக்குனர் ஷங்கர்… இதுதான் பெயர்!

இயக்குனர் ஷங்கர் தன் சக இயக்குனர்களுடன் கலந்துரையாட வாட்ஸ் ஆப்பில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 

இயக்குனர் ஷங்கர் தன் சக இயக்குனர்களுடன் கலந்துரையாட வாட்ஸ் ஆப்பில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சமீபகாலமாக இயக்குனர் ஷங்கர் தன் இயக்குனர் நண்பர்களை சந்தித்து பேசுவதில் ஆர்வமாக இருந்து வருகிறார். இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளில் கலந்துகொண்ட அவர் அதையடுத்து நண்பர்களோடு தொடர்பில் இருக்க,  வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளாராம். அந்த குழுவில் மணிரத்னம், லிங்குசாமி, மிஷ்கின், அட்லி உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த குழுவுக்குப் பெயர் ரெய்ன் ஆன் (Rain on) எனப் பெயர் வைத்துள்ளார்களாம். சினிமா சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டும் அதில் கலந்துரையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News