×

போதையை மறக்க இதுதான் ஒரே வழி - குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட நடிகர் ஜெய்

 

தமிழ் சினிமாவில் சில வெற்றிப்படங்களிலும், பல தோல்விப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ஜெய். வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்களுடன் பார்ட்டி பார்ட்டி என சென்று மனிதர் செம சரக்கடிப்பார் என்பது சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும்.பல முறை போதையில் காரை ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஆனாலும், மனிதர் மாறவில்லை.

jai

மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் சரக்கு கிடைக்காமல் போன போது மிகவும் திண்டாடிப்போய்விட்டாராம் ஜெய். எனவே, இசை ஒன்றே போதையை மரக்கடிக்கும் என நம்பி அவர் இசையமைக்க துவங்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் உறவுக்காரரான ஜெய்க்கு இசை வரும் என்பதால் தற்போது கீ போர்டில் உட்காந்து ட்யூன்களை போட்டு வருகிறார். 

மேலும், சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News