×

என் தம்பியின் தற்கொலைக்கு இது தான் காரணம்! ஆனந்த் ராஜ்

நடிகர் அனந்தராஜின் சகோதரர் தற்கொலை செய்துகொண்டதற்கு ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் என தகவல் பரவியது. ஆனால் உண்மை காரணாம் என்ன என்பதை நடிகர் தற்போது கூறியுள்ளார்.
 

அவர் ஏலச்சீட்டு நடத்திவந்ததாகவும் அவரிடம் பல முக்கிய பிரபலங்கள் பல கோடி ருபாய் அளவுக்கு சீட்டு கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட நஷ்டம் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தகவல் பரவியது.

ஆனால் நடிகர் ஆனந்த்ராஜ் இதை மறுத்துள்ளார். "என தம்பி நஷ்டத்தினால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் சமீபத்தில் பணம் கொடுத்து ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அது தொடர்பாக சிலர் இவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அதனால் தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அவரை எடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்" என ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News