Categories: latest news throwback stories

பிரசாந்தின் திடீர் சரிவுக்கு காரணம் இதுதானாம்… உண்மையை உடைக்கும் பிரபலம்..!

டாப்ல இருந்த பிரசாந்துக்கு திடீர்னு ஏன் சரிவு என ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் இவ்வாறு பதில் சொல்கிறார்.

பிரசாந்த் வரும்போது பல படங்கள் மாஸா இருந்தது. ஆயுதம் படம் சினேகாவுடன் நடித்தார். ரொம்ப பிடிக்கும். ஜீன்ஸ் படத்துல ஏழெட்டு பேரு டபுள் ஆக்ட். ரொம்ப நல்லா பண்ணிருப்பாரு. அவரு தந்தை தியாகராஜன் நல்ல பழக்கம்.

பிரசாந்தோட சரிவுக்கு அவர் தந்தை தான் காரணம். அவரது திருமணமும் காரணம்னு சொல்றாங்க. இதுபற்றி என்ன சொல்றீங்கன்னு கேட்டதுக்கு… டாக்டர் சொன்ன பதில் இதுதான்.

பிரசாந்த் சார் ஒரு கட்டத்துல ஒரு மாதிரி டல்லாயிட்டாரு. அவங்க அப்பா தான் காரணம்னு சொல்றதுல்லாம் தப்பு. நல்லா வளருதுக்கும் அப்பா தான்னு சொல்வாங்க. படத்துல மார்க்கெட் போனாலும் அப்பாவைத் தான் சொல்வாங்க. சிவகுமாரைக் கூட சொன்னாங்க.

சூர்யா நடிக்கும்போது பக்கத்துல வந்து ‘அப்படி நடி இப்படி நடி’ன்னு சொல்வாராம். அப்படி செய்திகள்லாம் வந்தது. ஆனா அது மாதிரி தான் தியாகராஜனுக்கும். ஒரு கட்டத்துல புது நடிகர்கள் வரும்போது அவங்க அப்படியே ஒதுங்கிட்டாங்க.

ஜீன்ஸை விட ஆயுதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கிளைமாக்ஸ் பைட்லாம் அசத்தலா இருக்கும். சுந்தர்.சி. இயக்கிய லண்டன் படம் ரொம்ப காமெடியா நல்லா இருக்கும். லேடி கெட்டப்ல அசத்தலா இருப்பாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Jeans

சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்துக்கு ரசிகைகள் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு அவரது நடிப்பு ரொம்பவே கியூட்டா இருக்கும். அவரது ஆரம்ப காலப் படங்களைப் பார்த்தாலே இது நமக்குத் தெரியும்.

அப்புறம் ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், ஆயுதம், ஆணழகன் படங்களில் மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.  தியாகராஜன் இயக்கிய அந்தகன் படம் தற்போது பிரசாந்துக்கு நல்ல கம்பேக்கைக் கொடுத்திருக்கு. பிரசாந்த், சிம்ரன் கெமிஸ்ட்ரி இந்தப் படத்துலயும் நல்ல ஒர்க் அவுட் ஆகியிருக்குது என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v