×

ரஜினியின் ஏமாற்றத்திற்கு காரணம் இதுதான்! - கசிந்த செய்தி

நடிகர் ரஜினிகாந்த் தனது அறிவிக்கப்படாத கட்சியின் மாவட்ட செயலாளர்களை இன்று காலைசென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. காரணம், இந்த சந்திப்பிற்கு பின் அவரின் அரசியல் நடவடிக்கை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ நிறைய விஷயங்கள் பேசினோம். இதில் அனைவருக்கும் திருப்தி. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. ஏமாற்றமே. அது என்னவென்று அப்புறம் சொல்கிறேன்’ எனக்கூறினார். செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டும் எது அவருக்கு ஏமாற்றத்தை தந்தது என அவர் தெரிவிக்கவில்லை. ரஜினியின் இந்த பேட்டி அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தற்போது ரஜினியின் ஏமாற்றத்திற்கான காரணம் வெளியே தெரியவந்துள்ளது.  எப்படியாவது ஒரு கோடி பேரை தனது கட்சியில் இணைக்க வேண்டும் என்கிற அசைன்மெண்டை தனது மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி கொடுத்திருந்தாராம். ஆனால், அதை அவர்களால் செய்ய முடியவில்லையாம். எனவே,இதுவே ரஜினிக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News