×

மாஸ்டர் டெலீட்டட் சீனுக்கு இதுதான் காரணம்... விஜய்க்கு நெருக்கமானவர் பகிர்ந்த தகவல் 

மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. 
 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்திருந்த படம் மாஸ்டர். பொங்கலையொட்டி வெளியாகி ஹிட்டடித்த இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட 4 நிமிடங்கள் 50 விநாடிகள் ஓடும் காட்சி சமீபத்தில் வெளியானது. அதில், பெண்கள் பாதுகாப்பு, தலைமைப் பண்பு உள்ளிட்டவைகள் குறித்து விஜய் பேசியிருப்பார். இவ்வளவு முக்கியமான காட்சிகளை ஏன் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ஒரு தரப்பினரோ அந்த சீனில் நடித்திருந்த கௌரி கிஷனின் தவறான எக்ஸ்பிரஷன்கள் காரணமாகவே நீக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். 

ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் இப்போது தெரியவந்திருக்கிறது. பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பெயர் வெளியிட வேண்டாம் என்ற கண்டிஷனோடு விஜய்க்கு நெருக்கமான நபர் ஒருவர் பேசியிருக்கிறார். அவர் கூறும்போது,`படத்தின் நீளத்துக்கும் அந்த காட்சி நீக்கப்பட்டதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டில் மிகவும் சென்சிட்டிவான விஷயம். இந்த விவகாரத்தில் மாநில அரசைக் குறைகூற விஜய் விரும்பவில்லை. அதனாலேயே அந்தக் காட்சி நீக்கப்பட்டது’ என்று கூறியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News