Categories: Cinema News latest news

எல்.கே.ஜி படத்தில் நடிக்காமல் போனதுக்கு காரணம்? புதுசா யோசிச்சிருக்காரே நம்ம கரகாட்டக்காரன்

Actor Ramarajan: தமிழ் சினிமாவில் மக்கள் நாயகனாக 80களில் இருந்து இன்று வரை அதே பேரும் புகழும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ராமராஜன். அவரின் சாமானியன் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் அதுவும் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் சாமானியன்.

மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்று வருகிறது. அந்த படத்தை குறித்தும் தன் சினிமா அனுபவத்தை பற்றியும் ராமராஜன் சமீப காலமாக பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார். ரஜினி கமல் இவர்களை எல்லாம் தாண்டி ராமராஜன் என்றாலே மக்களுக்கு ஒரு வித சந்தோஷம்தான். ஏனெனில் நம்முள் ஒருவராக ராமராஜனை பார்த்தவர்கள் தமிழ் ரசிகர்கள்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்கள்… கடைசியில் மாஸ் வில்லன்… அசால்ட்டாக மாநாடு படத்தினை தட்டி தூக்கிய எஸ்.ஜே.சூர்யா…

அதனாலேயே ராமராஜன் மீது அளவு கடந்த அன்பையும் இன்றுவரை கொட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எத்தனையோ திரைப்படங்களில் ராமராஜனுக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் அவை எல்லாவற்றையும் மறுத்துவிட்டார் ராமராஜன். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஒவ்வொன்றாக கூறி இருக்கிறார். அப்படி ஒரு படம்தான் ஆர் ஜே பாலாஜி நடித்த எல் கே ஜி திரைப்படம்.

அதில் இடைவேளைக்குப் பிறகு நடிகர் ரித்தேஷ் தோன்றிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ராமராஜன். முதலில் ராமராஜனிடம் இந்த கதையை பற்றி கூறும்போது அவர் முடியவே முடியாது என சொல்லிவிட்டாராம். நீங்கள் கேட்கும் சம்பளத்தை விட அதிகமாக தருகிறோம் தயவு செய்து நடிங்கள் என ஆர் ஜே பாலாஜி பலமுறை சொல்லியும் முடியாது என மறுத்து விட்டாராம்.

இதையும் படிங்க: தனுஷோட அப்படி இருந்திருப்பாங்க! கடைசில தனக்கே ஆப்பு வைத்துக் கொண்ட சுசி

இடைவேளைக்கு பிறகு வரும் கதாபாத்திரம் என்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருடைய ஒரு காரணம். அதையும் மீறி ராமராஜன் சொன்ன ஒரு முக்கியமான காரணம் என்ன என்றால் படத்தின் பெயர். அதாவது எல்கேஜி. இந்த படத்தில் நான் நடித்தேன் என தெரிந்தால் விமர்சனங்கள் என்னை காலி செய்து விடுவார்கள். கரகாட்டக்காரன் படத்தில் தொடங்கி அது படம் பிஹெச்டி பட்டத்திற்கு சமம். கடைசியில் எல்கேஜி வந்து முடித்து விட்டார் என கிண்டலாக பேசி விடுவார்கள். அதனால் மறுத்துவிட்டேன் என ராமராஜன் கூறியிருக்கிறார்.

Published by
Rohini