Categories: Cinema News latest news

கஜினி மாதிரி படையெடுத்த இயக்குனர்கள்! அசால்ட்டா தட்டி தூக்கிய லோகி.. கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க காரணம்

Actor Sathyaraj: ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. இன்று தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ஒரு தவிர்க்க முடியாத மாஸ் இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அவருடன் சேர்ந்து படம் பண்ணுவதற்கு தமிழ் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாக்களில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விஜய் சூர்யா கமல் ஆகியோரை வைத்து மிக பெரிய ஹிட் கொடுத்த நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் லோகேஷ். ரஜினியை வைத்து எப்படிப்பட்ட ஒரு ஆக்சன் படத்தை கொடுக்கப் போகிறார் என்பதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சத்யராஜும்  நடித்திருப்பது இன்னும் கொஞ்சம் கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ரோலக்ஸாக மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சூர்யா… ஆனா ஹீரோ அவர் இல்லையாம்!…

ஏற்கனவே கூலி படத்திற்கு முன்பு ரஜினி நடித்த பாபா, எந்திரன் போன்ற படங்களில் எல்லாம் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என பல இயக்குனர்கள் போராடி இருக்கின்றனர். அதற்கு காரணம் எந்தெந்த மேடைகளில் ரஜினியை தரக்குறைவாக பேசக்கூடாதோ, அந்த மேடைகளில் எல்லாம் ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் சத்யராஜ்.

அதனாலேயே இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் ஹீரோ வில்லனாக போட்டு படம் எடுத்தால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என கருதியே பல இயக்குனர்கள் சத்யராஜை அணுகி இருக்கின்றனர். ஆனால் அதை உண்மையாக்க கூடாது. சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை கருத்தில் கொண்டு சத்தியராஜ் வர வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தியன் படத்தின் அந்தக் காட்சி… அடுத்தடுத்த பாகத்திலும் தொடருமா?

ஆனால் கூலி படத்தில் மட்டும் எப்படி சம்மதித்தார் என்பதற்கு இதுதான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கூலி படத்தில் சத்யராஜை பொறுத்தவரையும் ரஜினிக்கு வில்லன் கதாபாத்திரம் கிடையாதாம் .ஒரு பாசிட்டிவான கதாபாத்திரம் தான் என்று சொல்கிறார் வலைப்பேச்சு அந்தணன். மேலும் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்ட பிறகே இந்த படத்திற்குள் சத்யராஜ் நுழைந்ததாக சொல்கிறார் வலைப்பேச்சு  அந்தணன்.

Published by
Rohini