Connect with us

Cinema News

படப்பிடிப்பில் பாலச்சந்தர் செய்யும் ட்ரிக்…இதனால்தான் ஹீரோயின்களுக்கு அவரை ரொம்ப பிடிக்குமாம்!..

சினிமாவில் பெரும் நட்சத்திரங்களை வளர்த்துவிடுவதில் இயக்குனர்களுக்கே முக்கிய பங்குண்டு. இதனால் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் இயக்குனர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது இயக்குனர்களுக்கு அந்த அளவிலான முக்கியத்துவம் இருப்பதில்லை.

இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை அப்போது வளர்த்துவிட்டவரே பாலச்சந்தர்தான். ஆனால் மிகவும் தன்மையான மனிதர் பாலச்சந்தர் என சினி துறையில் அவரை கூறுவதுண்டு.

தமிழில் தில்லு முல்லு, உன்னால் முடியும் தம்பி, புன்னகை மன்னன், சர்வர் சுந்தரம் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பாலச்சந்தர்.

பொதுவாக இயக்குனர்கள் படத்திற்கான வசனத்தை படம் துவங்கும் முன்னே எழுதிவிடுவார்கள். பாலச்சந்தரும் கூட அதே போல படத்திற்கான திரைக்கதையை கையில் வைத்திருப்பார். ஆனால் மற்ற இயக்குனர்களை போல அதை அப்படியே மனப்பாடம் செய்ய சொல்ல மாட்டார் பாலச்சந்தர்.

படப்பிடிப்பில் பாலச்சந்தர்

நடிகர், நடிகையரை அழைத்து அவர்களிடம் வசனத்தை கூறிவிட்டு பிறகு “உங்களுக்கு எப்படி பேச வருகிறதோ அப்படி பேசிக்கொள்ளுங்கள்” என கூறிவிடுவார். அறிமுக கதாநாயகிகளுக்கு ஆரம்பத்தில் இருக்கும் பெரும் பிரச்சனை வசனத்தை சரியாக பேசுவதுதான்.

ஆனால் பாலச்சந்தர் படத்தில் அவர்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது. அவர்கள் பாலச்சந்தர் படத்தில் தங்களுக்கு தகுந்தாற் போல வசனத்தை மாற்றி அமைத்து பேசிக்கொள்வார்கள். நடிகை சீதா, சுஹாசினி போன்ற நடிகைகள் பேட்டிகளில் பேசும்போது இந்த விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனாலேயே பாலச்சந்தர் படத்தில் நடிப்பதற்கு அப்போதெல்லாம் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

இதையும் படிங்க: கவுண்டமணி தினமும் தொட்டு கும்பிடும் புகைப்படம்… ஆனால் சாமி ஃபோட்டோ கிடையாது!…

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top