திருமணமே செய்து கொள்ளாத கோவை சரளா - காரணம் இதுதானாம்!
Wed, 9 Sep 2020

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் கோவை சரளா. சிறு சிறு வேடங்களில் நடித்து அதன்பின் முன்னணி நகைச்சுவை நடிகையாக அவதாரம் எடுத்தவர். சில திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அதோடு, அனைத்து முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இதுபற்றி சமீபத்தில் அவர் மனம் திறந்துள்ளார்.
நான் எனது தம்பி, தங்கைகளின் குழந்தைகளையே என் குழந்தைகளாக பார்த்து வந்ததால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை. எனவே, என்னிடமிருந்து ஒரு ஆண் தப்பித்து விட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.