×

கண்டுகொள்ளாத நஸ்ரியாவை உருகி உருகி காதலித்ததற்கு காரணம் இது தான் - பஹத் பாசில்!

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா. கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். அவர்  நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்று தொடர்ந்து முன்னணி நடிகையாக் இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமாக விலகினார்.

 

மீண்டும் தற்ப்போது கணவருடன் நேரத்து நடித்துள்ளார். இந்நிலையில் நஸ்ரியாவின் கணவர் பஹத் பசில் தங்களது காதலை குறித்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது " நானும் நஸ்ரியா பெங்களூரு டேய்ஸ் படத்தில் நடித்துக்கொண்டிருந்தோம். அதற்கு முன் வரை யார் என்னை பார்த்தாலும், அணுகினாலும் என் திறமை மற்றும் வெற்றியை கண்டு ஜால்ரா தட்டுவார்கள். ஆனால், நஸ்ரியா என்னை முதலில் பார்த்தபோது எந்த வித ஓவர் ரியாக்ஷனும் இல்லாமல் நானும் ஒரு சாதாரண மனுஷர் போல் எல்லோரிடமும் பழகுவது போன்று தான் என்னிடமும் பழகினார்.

அதுவே எனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது குமணமும், நடத்தையும் பார்த்து காதலிக்க தோன்றியது. இருந்தும் என்னுடைய காதலை அவரிடம் சொல்லமுடியாமல் தவித்தேன். ஆனால், என்னை முழுவதும் புரிந்த்துக்கொண்ட நஸ்ரியா அவராகவே வந்து வெளியே செல்லலாமா..? என கேட்டு என்னை சிலிர்க்க வைத்தார். பின்னர் இருவரது பெற்றோரும் பச்சைக்கொண்டி காட்ட எங்கள் கல்யாணம் நடந்தது என கூறினார். பஹத் பாசில் நஸ்ரியாவை விட 12 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News