Categories: Cinema News latest news throwback stories

யாரடி நீ மோகினி படத்திற்கு ஓகே சொல்ல இவர் தான் காரணம்… அம்மாவிடம் கண்ணீர் விட்ட ரகுவரன்…

Raghuvaran: தமிழ் சினிமாவின் வில்லன் நடிகருக்கு ஒரு கூட்டம் லைக்ஸ் தட்டும் என்றால் அந்த பட்டியலில் இருக்கும் முதல் சில பெயரில் ரகுவரனின் பெயரும் இருக்கும். அப்படிப்பட்ட ரகுவரன் சாப்ட் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படத்துக்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரகுவரன். நாடகத்தில் நடித்து வந்த ரகுவரனுக்கு முதல் பெரிய வாய்ப்பாக அமைந்தது ஏழாவது மனிதன். இருந்தும் அவரை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியது சில்க் சில்க் சில்க் படத்தின் வில்லன் கேரக்டர் தான்.

இதையும் படிங்க: ஹிட்டடித்த ஐ நோ டயலாக்…! ஓவர் இம்சை செய்த ரகுவரன்… காண்டாகிய கே.எஸ்.ரவிக்குமார்… சூப்பர் பின்னணி!

1980களில், ரகுவரன் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். அதில், பெரும்பாலானவை நல்ல வியாபாரத்தையும் செய்தன. மைக்கேல் ராஜ், மேகம் கருத்துத் திருக்கு, கூட்டுப் புழுக்கள், கவிதை பாட நேரமில்லை ஆகிய படங்கள் இவரது கேரியரை வலுப்படுத்த உதவியது. 

கலியுகத்தில் வக்கீல், தாய்மேல் ஆனையில் போலீஸ் அதிகாரி, கைநாட்டு படத்தில் நல்ல ரவுடி, குற்றாலத்தில் ரவுடியாக மாறிய நேர்மையான மருத்துவ மாணவன், என் வழி தனிவழியில் சாதாரண மனிதனாக ரகுவரனின் மார்க்கெட் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருந்தது.

இதையும் படிங்க: அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களாக இருக்கும் விஜய், தனுஷ், மாதவன் ஆகியோர் படங்களிலும் நல்ல கேரக்டரை தேர்வு நடித்து வந்தார். ஆனால் அவர் யாரடி நீ மோகினி படத்தில் நடித்ததற்கு காரணம் அவர் மகன் தானாம். தனுசை பார்க்கும் போது அவர் மகன் போலவே இருந்ததால் தான் இப்படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

தொடர்ச்சியாக படப்பிடிப்புக்கு போய் விட்டு வரும் போது என் மகன் என்னை எப்படி பாத்துக்குவானோ, அப்படி பார்த்துக்கிட்டார் என பெருமையாக தனுஷை குறித்து தன் அம்மாவிடம் கண்ணீர் மல்க கூறுவாராம். தன் வாழ்க்கை மாதிரியே இப்படம் எனக் கூறிய நிலையில் அப்படத்தில் அவர் இறந்தது போலவே நிஜ வாழ்க்கையிலும் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily