×

நேத்து போட்ட ரோடு.. அதிமுக அரசின் சாதனை இதுதான்!- வைரலாகும் வீடியோ

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
 

சமீபத்தில் தனது பகுதியில் போடப்பட்ட தார்ச்சாலை மோசமாக இருப்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவர் அதை தனது கையால் பெயர்த்தெடுத்து காட்டும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர வைரல் வீடியோவாக மாறியது.

ஆனால், இது எந்த ஊரில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவில்லை. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இதுதான் அதிமுகவின் சாதனை’ என கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால், தரம் குறைந்த சாலைகள் எல்லா ஆட்சிகளிலும் போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News