D56:படத்தோட கதை வேறலெவல்!.. தனுஷ் - லப்பர் பந்து இயக்குனரோட படத்தில் சம்பவம் இருக்கு!.

 
dhanush


கர படத்திற்கு பின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தற்போது ஓம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்று கூட இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. சாய் அபயங்கர் இசை என்பதால் வழக்கம் போல் பாடல் வரிகள் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் ஜென்சி இளைஞர்கள் இந்த பாடலை கொண்டாடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது...

ஓம் படத்திற்கு பின் லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது தனுஷின் 56வது திரைப்படமாகும். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில்தான் இது எப்படிப்பட்ட கதை என்பது என்கிற தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு கோயிலிலேயே தனுஷ் எப்போதும் இருப்பாராம். அவர் ஏன் எப்போதும் அந்த கோயிலிலே இருக்கிறார் என்பதற்கான பின்னணிதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது..

தனுசுக்கு கிராமத்து கதை நன்றாகவே பொருந்தும் என்பதால் என்பதாலும், இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சையமுத்து லப்பர் பந்து என்கிற படத்தை கொடுத்திருப்பதாலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags

From Around the web