×

அட்லி & ஷாருக் கான் படத்தின் தலைப்பு இதுதான்… ஹீரோயினும் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறிய அட்லி இப்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்துப் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறிய அட்லி இப்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்துப் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

என்னதான் அட்லி பழைய படங்களைக் காப்பி அடிக்கிறார் என சொன்னாலும், அவர் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதால் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக் கானே அவரைக் கூப்பிட்டு கதைக் கேட்டார். பிகில் படத்துக்குப் பின் மும்பையில் முகாமிட்டு கதை விவாதம் செய்துவந்தார் ஷாருக். ஆனால் படத்தின் கதை ஷாருக் கானுக்கு பிடிக்கவில்லை என சொல்லப்பட்டது.

இந்த படம் நடக்குமாதா நடக்காதா என்ற குழப்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அட்லி இயக்க ஷாருக் கான் நடிக்கும் படத்துக்கு  சங்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷாருக் கானின் ஹிட் கதாநாயகிகளில் ஒருவரான தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News