×

இந்த ஸ்கூல் பாப்பா தான் கோலிவுட் டாப் நடிகை - பெட் கட்றோம் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

 

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி காலத்து போட்டோவை வெளியிட்டு "இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்" என கேட்க,   உடனே இந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடையாளம் கண்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அது சரி நீங்க கண்டுபிடிச்சுடீங்களா..?

From around the web

Trending Videos

Tamilnadu News