Categories: Cinema News latest news throwback stories

முழம் நீட்டு முடி வளர்க்க சொன்னா என்ன பண்ணிட்டு வந்திருக்க…. அஜித்தை பளார் விட்ட பிரபலம் – இன்று வரை நீடிக்கும் பகை!

தமிழ் சினிமாவில் புரியாத புதிர் இயக்குனராக ’பாலா’ பல்வேறு விசித்திர கதைகளை கொண்டு படம் இயக்கி பலரையும் ஆச்சர்யப்படவைத்தார். பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வந்த வைரங்களில் ஒருவரான பாலா விக்ரமை வைத்து சேது படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி பதித்தார். முதல் படத்திலியே தேசிய விருது பெற்று ஹிட் இயக்குனராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.

பாலா படங்கள் என்றாலே மற்ற இயக்குனர்களை விட பல விஷயங்களில் வித்யாசம் காட்டுவது தான். அழுக்கான உடை அணிந்த ஹீரோ, கருப்பான நாகரீகம் இல்லாத ஹீரோயின், படம் முழுக்க பாடல்களை போட்டு திணிக்கமாட்டமாட்டார். கதையை சிறப்பான முறையில் சொல்ல ஆரம்பித்து தெளிவாக முடிப்பார். இதெல்லாம் தான் பாலாவை வியந்து பார்க்க வைத்தது.

அதனால் அவரது இயக்கத்தில் ஒரு படம் ஆவது நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆசைப்படுவதுண்டு. அப்பாடித்தான் பாலா அஜித்தை வைத்து நான் கடவுள் படத்தை முதலில் இயக்கினார். ஆனால், பாலா அஜித்திடம் கடைசி வரை முழு கதையை சொல்லாமல் நீளமாக தாடி வளர்த்துவிட்டு வா, நிறைய முடி இருக்கனும், உடம்பு நல்லா கட்டுமஸ்தான தோற்றத்தில் இருக்கனும் என சுமார் ஒரு வருஷம் இதையே திரும்ப திரும்ப சொல்லியதால் கடுப்பான அஜித் முதலில் கதையை சொல்லுங்க என கத்தினராம்.

உடனே அங்கிருந்த தயாரிப்பாளர் அஜித்தை ஒங்கி அடித்துவிட்டாராம். இதில் பாலா அஜித்தை அடிக்கவில்லையாம். ஆனால் அவர் அவ்வளவு கத்தி கோப்பப்பட்டாராம் ஆதலால் அந்த படத்தில் இருந்து அஜித் வெளியேற ஆர்யா நடித்தார். இது தான் நடந்த உண்மை ஆனால் இன்று வரை பாலா – அஜித் பகை நீண்டுக்கொண்டுதான் இருக்கிறது என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்