Categories: Cinema News latest news throwback stories

அஜித் – விஜயகாந்த் மோதல்…. திட்டிய விஜயகாந்த்…. கழட்டி காட்டியதும் கலங்கிய கேப்டன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மிகவும் அர்ப்பணிப்புடன் நடிப்பவர். அது மட்டும் அல்லாமல் ஒரு நடிகர் என்ற எந்த பந்தாவும் காட்டாமல் மிகவும் தன்மையான மனிதராக சக நடிகர்களை கவர்ந்தார். அஜித் திரைப்படங்களில் நடித்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.

இதனாலே அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக வாழு, வாழ விடு.
நம்மளும் வாழனும், மத்தவங்களையும் எந்த தொந்தரவும் செய்யாம வாழ விடணும் என்பதை பின்பற்றுபவர். இதனால் திரைத்துறையில் பெரிதாக எந்த நடிகருடனும் போட்டி போடமாட்டார். விஜய் ரசிகர்கள் போட்டிக்கு வந்தால் கூட அஜித் ஒருபோதும் அப்படி நடந்துக்கொள்ளவே மாட்டார். அவ்வப்போது தான் நல்ல மனிதர் என்பதை நிரூபிப்பாராம்

அப்படிதான் ஒரு முறை நடிகர் சங்க கலைநிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த நடிகர், நடிகைகளும் பங்கேற்கவேண்டும் என விஜயகாந்த் கட்டளையிட்டிருந்தாராம். அதில் எல்லோரும் கலந்துக்கொண்டாராம். ஆனால் அஜித் வரவில்லையாம். அந்த நிகழ்ச்சி முடிந்த பின் வந்த அஜித் ஒரு தொகையை கொண்டு தன் பங்காக கொடுத்தாராம்.

ஆனால் அதை வீசி எறிந்த விஜயகாந்த். நீ என்ன அவ்ளோவ் பெரிய ஆளா? என கேட்டு திட்டினாராம். அப்போது அஜித் சட்டையை கழட்டி தனது முதுகில் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பதை காட்டி நான் இந்த வழியிலும் நடித்து வருகிறேன் காரணம் தயாரிப்பாளர் நஷ்டம் அடையகூடாது என்பதற்காக தான் என்றதும் விஜயகாந்தே கலங்கி அழுது காசே வேண்டாம்பா நீ எடுத்திட்டு போ என சொல்லி அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்