Categories: latest news

சத்யராஜ் என்ன இவ்வளோ கறாரா இருக்காரே… கூலி படத்தில் நடக்கும் சம்பவம்

Sathyaraj: நடிகர் சத்யராஜ் தான் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடக்கும் சுவாரசிய தகவல் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தும், குணச்சித்திர வேடத்திலும் ஹிட் கொடுத்த நடிகர் சத்யராஜ். வில்லனாக வெற்றி கண்ட நடிகர் சத்யராஜ் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார். அதை தொடர்ந்து தற்போது முக்கிய படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கார் டயர் பஞ்சர்… பாரதிராஜாவுக்கு அடித்தது லக்… லேடி சூப்பர்ஸ்டாரே கிடைச்சுட்டாரே..!

சத்யராஜின் திரை வாழ்க்கையில் அவர் நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கும் ரஜினிக்கும் இடையேயான காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடம் பேசும் பொருளாக இருக்கிறது. ஆனால் அப்படத்தை தொடர்ந்து இருவரும் அதற்கடுத்த படங்களில் நடிக்கவில்லை.

சத்யராஜ் பல மேடைகளில் ரஜினியின் அரசியல் கொள்கைகள் குறித்து கேலி பேசி இருப்பதும் உண்டு. நேரடியாகவும் பல இடங்களில் தாக்கி பேசியிருக்கிறார். இதனால் இருவரும் 38 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து நடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: கோட் கேமியோ ரோல்… அந்த டயலாக் எப்படி வந்ததுன்னு தெரியுமா? SK. சொன்ன சூப்பர் தகவல்

நானும் அவருடைய வொர்க் அவுட் குறித்து கேட்டார். என்னுடைய வயதை கேட்டார். நான் 70 என்று சொன்னதும் ஆச்சரியப்பட்டார். தற்போது இது போன்ற விஷயங்களை தான் சொல்ல முடியும். கதை குறித்தும் அவுட்லைன் குறித்தும் பேச முடியாது. ஒப்பந்ததில் அதுதான் இருக்கு. வேறு எதுவும் இப்போ சொல்வதற்கு இல்லை என முடித்து கொண்டார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily