×

இதைத்தான் நாங்க ‘ஒய் திஸ் கொலைவெறியிலே கேட்டுட்டோமே! குட்டிக்கதை பாட்டு குறித்து நெட்டிசன்கள்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு குட்டி கதை பாடல்’ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்து ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கும் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும் நார்மலான ரசிகர்களுக்கு இந்த பாடல் ஏமாற்றமாக இருந்துள்ளது 

‘ஒய் திஸ் கொலைவெறி உட்பட பல பாடல்களில் கேட்ட ஆங்கிலம் கலந்த தமிழ் அறிவுரையே இந்த பாடலில் நிற்பதாகவும் புதுமையாக ஏதும் இல்லை என்றும் அனிருத் மற்றும் அருண்ராஜா காமராஜ் இந்த பாடல் மூலம் ரசிகர்களை ஏமாற்றி விட்டதாகவும் கருத்து கூறி வருகின்றனர். 

ஆனால் அதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டென்சன் வேண்டாம், நெகட்டிவிட்டி வேண்டாம், பாசிட்டிவிட்டி போதும், ஹார்ட் ஒர்க் மற்றும் ஸ்மார்ட் ஒர்க் தேவை, சுயபரிசோதனை தேவை போன்ற அறிவுரைகள் விஜய்யின் குரலில் கேட்பது திருப்தியான ஒன்றாகவே உள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News