×

இங்கதான் வொர்க் அவுட் ஆகல… அங்கயாவது பார்ப்போம் – தமிழ் நடிகரை பாலிவுட் அழைத்து செல்லும் பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா இயக்கும் பாலிவுட் படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக பரத் நடிக்க உள்ளார்.

 

நடிகர் பிரபுதேவா இயக்கும் பாலிவுட் படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக பரத் நடிக்க உள்ளார்.

நடிகர் பரத் தமிழ் சினிமாவில் ஷங்கர் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் வந்த காதல் திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரை படவாய்ப்புகள் சூழ்ந்தன. அவற்றில் சில கிளிக் ஆகி வெற்றியைக் கொடுக்க பல படங்கள் தோல்வியை தழுவின. அதனால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரின் நண்பரான இயக்குனர் பிரபுதேவா அவரை பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க உள்ளார். அதுவும் சல்மான் கான் படத்தில்.

Hola Amigo!: Actor Bharath Six Pack Abs

இப்போது பிரபுதேவா சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர் இப்போது மும்பைக்கு பயணமாகியுள்ளார். சல்மான் கானுக்கே வில்லன் என்றால் பாலிவுட்டிலாவது அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறாராம் பரத்.

From around the web

Trending Videos

Tamilnadu News