×

இதனால்தான் தோனியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டது ! பிசிசிஐ தரப்பு விளக்கம் !!

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் தோனி இடம்பெறாததன் காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

 

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் தோனி இடம்பெறாததன் காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய தோனியின் ஒப்பந்தம் ஏன் நீக்கப்பட்டது எனபிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

’உலகக் கோப்பை போட்டியின் போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட தோனி, அதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு எந்தவொரு தகவலும் சொல்லாமல் ராணுவ சேவையாற்ற சென்றுவிட்டார். இதனால் தான் தோனியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News