×

இதுக்கு தான் என் மாமியார் வீட்டிற்கு வந்தேன்... ஆனால், சன்னி லியோனி வருத்தம்!

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சன்னி லியோனி.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று சன்னியை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார்.

 

அத்துடன் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்ணுக்கு தெரியாத கொரோனா நோய் கிருமிகளிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் பாத்துக்க குடும்பத்துடன் தனது மாமியார் வீடான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு சென்றார் .

அங்கிருந்தபடியே பேட்டி ஒன்றில் பேசிய அவர், “டேனியலின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பது எங்களுக்கு முக்கியமானது. மேலும், எனது குழந்தைகளுக்கு இந்த இடம் பிடித்து விட்டது. அவர்கள் எப்போதும் வெளியில் தான் விளையாடுகிறார்கள். இருந்தும் நான் மும்பையை ரொம்ப மிஸ் பண்றேன். சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதும்  நாங்கள் இந்தியாவுக்கு திரும்பிடுவோம். இந்தியாவுக்குப் புறப்படும் முதல் விமானத்தில் நாங்கள் வர விரும்புகிறோம்."  என அந்த பேட்டியில் கூறியுள்ளர். .

From around the web

Trending Videos

Tamilnadu News