×

நம்ம சென்றாயனா இது..... மங்காத்தா அஜித் ஸ்டைலில் கெத்து காட்டுறார்..!

நடிகர் சென்றாயான் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் ஜீவா நடித்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு  கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

 

திரைப்படங்களில் நடித்து வந்த சென்றாயனுக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பேமஸ் ஆனார்.  தொடர்ந்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்ப்போது கொரோனா ஊரடங்கு என்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மங்காத்தா அஜித் ஸ்டைலில் வெள்ளை நிற கோட் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டு போட்டோ சஷூட் நடத்திய செம கெத்தாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த மாஸ் போட்டோ இணையத்தில் தீயாக பரவி செம வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News