
Cinema News
‘லியோ’வை கூண்டோடு தூக்க ரெட் ஜெயண்ட் போடும் பக்கா ப்ளான்!.. களத்தில் காத்திருக்கும் பெரிய ஆப்பு!..
Published on
By
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். ஒரு நடிகருக்கு சமுதாயத்தில் எந்த அளவுக்கு மரியாதையும் மதிப்பும் இருக்கிறதோ அதே அளவுக்கு போட்டிகளும் பொறாமைகளும் காத்துக் கொண்டிருக்கும்.
சமீபத்தில் விஜய் லோகேஷ் கூட்டணியில் லியோ படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயரை அறிவித்த நாளில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. படத்தின் பெயரை அறிமுகப்படுத்திய போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்து விட்டனர்.
vijya1
லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்தனர். லியோ படத்தோடு மீண்டும் அஜித் படம் தான் மோத இருப்பதாக எதிர்பார்த்திருந்த நிலையில் ஏகே 62 படத்தின் இயக்குனரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் படத்தின் படப்பிடிப்பும் துவங்குவதில் தாமதம் காட்டுவதால் நிச்சயமாக லியோ படத்தோடு ஏகே 62 படம் போட்டியாக இருக்காது என தெரிகிறது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக பொன்னியின் செல்வன் லியோ படத்தோடு க்ளாஷாக இருக்கும் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றது.
vijay3
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் படத்தில் இன்னும் ஏதோ சிஜி வேலைகள் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் படத்தின் தமிழ் நாடு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கி இருப்பதால் இதன் பின்னனியில் ரெட் ஜெயண்டின் திட்டம் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
red giant movies
அரசியல் விளையாட்டுடன் விஜயின் மீதான அந்த பார்வை ரெட் ஜெயண்டை இந்த அளவுக்கு யோசிக்க வைத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே துணிவு படத்தின் உரிமையை வாங்கி ஒரே தேதியில் வெளியிட்டு விஜயின் வாரிசு படத்தின் வசூலை கணிசமாக குறைத்ததில் ரெட் ஜெயண்டிற்கும் பங்கு உண்டு என கூறுகின்றனர்.
இதையும் படிங்க : நாலு பேர் நாலு விதமா பேசுனதுனால வந்த விரக்தி… அஜித் பத்திரிக்கை பேட்டிகளை மறுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
இந்த நிலையில் மீண்டும் விஜயின் லியோ படத்தின் வசூலிலும் கை வைக்கவே இந்த ப்ளானை தீட்டியிருப்பதாக தெரிகிறது. பொன்னியின் செல்வனும் லியோவும் ஒன்றாக ஒரே தேதியில் வெளியானால் கண்டிப்பாக போட்டி பலப்படும்.ஆகவே சூட்சமாக ரெட் ஜெயண்ட் காய் நகர்த்தி வருகிறது என சொல்லப்படுகின்றது.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...