Categories: Bigg Boss latest news television

இந்த வாரம் ரம்யா கிருஷ்ணனா…? கமல்ஹாசனா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்கப்போவது யார்?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனே தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல் அமெரிக்கா சென்று திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்று பலருக்கும் யூகித்து வந்தனர்.

பின்னர் சென்ற வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால், அவர் அதற்கு சரியான ஆளாக இல்லை. கமல் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை சீக்கிரம் குணமாகி திரும்ப வந்திடுங்கள் என ஆடியன்ஸ் பலரும் கூறி வந்தனர்.

இதையும் படியுங்கள்: பீஃப் பிரியாணி சமைத்த வனிதா… விளாசும் நெட்டிசன்கள்…..

எனவே இந்த வராம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என குழப்பம் பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் மருத்துவமனை சார்பாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நடிகர் கமல் டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து தன் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவித்திருந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் சற்றுமுன் இந்த வார நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்