Categories: Cinema News latest news

ஜெயம் ரவியா..? லாரன்ஸா..? இந்த வார ஓடிடி ரிலீஸ்.. ஏகப்பட்ட தமிழ் படங்கள்… செம வேட்டை தான்..!

OTT: தமிழ் சினிமாவின் இந்த வார ஓடிடியில் நிறைய தமிழ் படங்கள் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வார இறுதியை ஜமாய்க்க சூப்பர் ஐடியா தான். உங்க சாய்ஸ் என்னவா இருக்குமென யோசிச்சிக்கலாமே.

இறைவன்: த்ரில்லர் படமாக உருவாகி வெளியானது இறைவன் திரைப்படம். ஏ சர்டிபிகேட் படம் என்பதால் குடும்ப ரசிகர்கள் ரொம்பவே கம்மி. நயன் ஜோடியாக நடித்தார். படத்துக்கு சரியாக ப்ரோமோஷனும் இல்லை. படம் சுமார் ரகம் தான் எனக் கூறப்பட்டது. இந்த வாரம் நெட்ப்ளிக்ஸில் ரிலீஸாக இருக்கிறது.

இதையும் படிங்க: லியோ படத்தில் நீ இருப்பியாமா… அனுராதா மகன் ஆசையாக கேட்ட விஷயம்.. ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்டே..!

சந்திரமுகி 2: ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் படமான சந்திரமுகி. இதை இரண்டாம் பாகமாக பி.வாசு இயக்கினார். ஆனால் இந்த முறை ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்திருந்தனர். ஜோதிகாவுடன் ஒப்பிட்டு கங்கனா நடிப்புக்கு விமர்சனம் எழுந்தது. தியேட்டரில் ஒரளவு வசூல் படைத்து இந்த வாரம் நெட்ப்ளிக்ஸில் ரிலீஸ் செய்கிறார்கள்.

ஸ்காண்டா: ராம் பொத்னேனி நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படம் ஸ்காண்டா. சுமார் வரவேற்பினை பெற்ற இப்படத்தினை தமிழிலும் ரிலீஸ் செய்கிறார்கள். ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. நல்ல விமர்சனம் பெறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…

சோனி லைவில் கோலங்கள், ஆஹா தமிழில் யாரோ, சூரபணம், கேஸ் 30 ஆகிய படங்களும் ரிலீஸாக இருக்கிறது. மேலும் காபி வித் கரண், மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட வெப்சிரிஸ்களும் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily