Categories: Cinema News latest news

வீக் எண்ட்டுக்கு பக்காவா சிக்கிட்டே… இந்த வார சூப்பர்ஹிட் ஓடிடி ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!..

OTT Release: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் பெரிய எதிர்பார்ப்பே வாரா வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் தான். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த வார தமிழ் படங்கள் ரிலீஸால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

மலையாள சினிமாவை வேறு ஒரு பரிணாமத்துக்கு அழைத்து சென்று இருப்பது மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் தான். உண்மை சம்பவத்தினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். ஷைபின் சபீர் தயாரித்த நடித்த இப்படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் குணா திரைப்படம் பெரிய உதவியாக அமைந்தது.

இதையும் படிங்க: நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

மலையாள உலகை தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் பெரிய லைக்ஸ் குவித்தது. கோடிக்கணக்கில் வியாபாரத்தினை குவித்தது மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் ரிலீஸாகி பல நாட்களை கடந்து இப்படம் மே5ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. 

விகாஸ் பால் இயக்கத்தில் இந்தியில் வெளியான திரைப்படம் ஷைத்தான். இப்படத்தில் மாதவன், அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். மார்ச் 8ந் தேதி வெளியான இத்திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை என்றாலும் வருமானம் குறைவுதான். இத்திரைப்படம் மே 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது.

இதையும் படிங்க: அந்த படத்தினை நான் மிஸ் பண்ணிருக்கேன்… சூப்பர்ஹிட் அடித்த 9 படங்களை தவறவிட்ட விஷ்ணுவிஷால்!

Published by
Shamily