தியேட்டர்களில் ஜெயிலர் 2 ஃபீவர்!.. இந்த வாரம் ஓடிடிக்கு படையெத்த தி பாரடைஸ், டோரதி.. விட்றாதீங்க!

 
dorathy

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் டோரதி, 4 இடியட்ஸ், தி பாரடைஸ், சட்டமும் நீதியும் 2 (வெப்சீரிஸ்), வரம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் மற்றும் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

நானி, கயாடு லோஹர் நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள தி பாரடைஸ் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியானது. இதேபோல், விஷ்வதேவ் ரச்சகொண்டா, சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ள வரம் தொடரும் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும், சட்டமும் நீதியும் என்ற தொடரின் இரண்டாவது சீசன் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் 4 இடியட்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே, இந்த வாரம் வீட்டிலிருந்தபடியே ஒடிடியில் புதிய படங்களை காண   ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Tags

From Around the web