
latest news
OTT: இந்த வார ஓடிடி படங்களின் லிஸ்ட்!… ஹிட் அடிக்குமா கூலி?…
OTT Release: முன்பெல்லாம் திரைப்படங்களை தியேட்டர்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் கொரோனா காலத்தில் ஓடிடி வந்தது. இதை டிஜிட்டல் ஒளிபரப்பு என சொல்வார்கள். இதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஏற்கனவே வெளியான புதிய படங்களை மூன்று வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுவார்கள். அல்லது சில படங்களை நேரடியாக ஓடிடியில் ப்ரீமியர் செய்வார்கள்.

அதேபோல் சில எபிசோடுகளை கொண்ட வெப் சீரியஸ்களும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது பற்றி பார்ப்போம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. 1000 கோடி வசூலை அடிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் 500 கோடி தாண்டி இப்படம் வசூல் செய்தது. இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் பலராலும் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க முடியவில்லை. தற்போது ஓடிடிடியில் வெளியாகி இருப்பதால் பலரும் பார்க்க வாய்ப்புண்டு.

அடுத்து விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக நடித்து வெளியான பீனிக்ஸ் திரைப்படம் டெண்ட் கொட்டா என்கிற ஓடிடியில் வெளியாகிறது. தியேட்டரில் எதிர்பார்த்த வசூலை பெறாத பீனிக்ஸ் திரைப்படம் ஓடிடியில் வரவேற்பை பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அடுத்து ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஷீலா ராஜ்குமார், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான வேம்பு திரைப்படம் என்று ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
அடுத்து மணி வர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், காளி வெங்கட், மால்வி மல்கோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்து ஜூலை மாதம் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகிறது. இது ஹாரர் திரைப்படம் ஆகும். இதுபோக நெட்பிலிக்ஸில் நிறைய ஆங்கில, கொரியன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் திரைப்படங்களும், வெப்சீரியஸ்களும் இன்று வெளியாகிறது.