மிஸ்டர் எக்ஸ் முதல் துரந்தர் வரை… ஓடிடிக்கு இந்த வார ஸ்பெஷல் கவனிப்புதானோ?

 
மிஸ்டர் எக்ஸ் முதல் துரந்தர் வரை… ஓடிடிக்கு இந்த வார ஸ்பெஷல் கவனிப்புதானோ?

OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார ஏகப்பட்ட சினிமா ரிலீஸ்களால் வார இறுதி செமையாக களைக்கட்டும் என எண்ணப்படுகிறது. 

அந்த வகையில் இந்த வாரம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஆர்யா, மஞ்சிமா மோகன், கௌதம் கார்த்திக் என பல முன்னணி நடிகர்கள் நடித்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான இப்படம் சரியாக சோபிக்கவில்லை. 

இருந்தும் ஓடிடியில் பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் கண்டிப்பாக ரசிகர்களிடம் லைக்ஸ் குவிக்கும் என்றே நம்பப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றி படமான துரந்தர் படத்தின் இரண்டாம் பாகமும் வைரல் வெற்றியை பெற்றது. 

அந்த படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த முறை இந்தியில் மட்டுமே ரிலீஸ் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. பரத் நடிப்பில் வெகுநாட்கள் கழித்து ஒரு திரில்லர் படமாக காளிதாஸ் இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ப்ரைமில் பரபரப்பான எக்ஸாம் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. 

குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு நடிப்பில் ஒரு துரோக சாஹச்சர்யத்தில் என்னும் சீரிஸாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ஸ்போர்ட் டிராமாவான கப் திரைப்படம் மேத்யூ தாமஸ் நடிப்பில் மனோரமா மேக்ஸில் வெளியாக இருக்கிறது. 

From Around the web