இந்த வார ஓடிடி ரிலீஸ்: வீக் எண்டில் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்

 
இந்த வார ஓடிடி ரிலீஸ்: வீக் எண்டில் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்

திரையரங்குக்ள் போலவே ஓடிடி தளங்களும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. திரையரங்குகளில் ஓடாத படங்கள் கூட ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், பல்வேறு மொழிகள் உருவாகி ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 ஆகிய முன்னணி ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகியுள்ள மற்றும் வெளியாகவுள்ள முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவலை இங்கே காணலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் வெளியீடுகள்:

பிரதிச்சாயா : மலையாளத் திரையுலகில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஒரு சிறந்த அரசியல் த்ரில்லர் ஆகும். நிவின் பாலி, ஷரஃபுதீன், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ள இப்படம், கேரள மாநில அரசியலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளையும், திரைமறைவு சூழ்ச்சிகளையும் மிகவும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது . இப்படம் நாளை (ஏப்ரல் 24) ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

ஒராங்குட்டான்: டிஸ்னி நேச்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆங்கில ஆவணத் திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீசாகி உள்ளது. சுமத்ரா காடுகளில் வாழும் 'இந்தா' என்ற 9 வயது ஒராங்குட்டான் குரங்கின் தனிமையான வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் படமிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காண வேண்டிய படம் இது.

ஜீ5 வெளியீடு

பேண்ட் மேளம் : ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'பேண்ட் மேளம்'. ஒரு சிறிய கிராமத்துப் பின்னணியில், திருமண வீடுகளில் பேண்ட் வாசிக்கும் இளைஞனுக்கும் அவனது சிறுவயது தோழிக்கும் இடையிலான காதலை அழகாகவும் யதார்த்தமாகவும் சொல்லும் இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

சன் நெக்ஸ்ட் வெளியீடுகள்:

ஜேசி தி யுனிவர்சிட்டி : கன்னட மொழியில் ஆக்‌ஷன் மற்றும் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள அதிரடிப் படம் 'ஜேசி தி யுனிவர்சிட்டி'. சூர்யா பிரக்யாத், ரங்காயண ரகு நடித்துள்ள இப்படம், சாதாரணமாகக் கல்லூரிக்குச் செல்லும் ஒரு நடுத்தர வர்க்கத்து மாணவன், எதிர்பாராத விதமாகச் சிறைக்குச் சென்று எப்படிப் அண்டர்கிரவுண்ட் தாதாவாக மாறுகிறான் என்பதை வன்முறை மற்றும் ஆக்‌ஷன் கலந்து கூறுகிறது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.

லேசிந்தி மகிளா லோகம்: லட்சுமி மஞ்சு, அனன்யா நாகல்லா மற்றும் ஷ்ரத்தா தாஸ் ஆகிய முன்னணி நடிகைகள் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த காமெடி டிராமா திரைப்படம் இது. சமூகத்தில் பெண்கள் மீது காலம் காலமாகத் திணிக்கப்படும் கட்டுப்பாடுகளையும், பாலினப் பாகுபாடுகளையும் நகைச்சுவை மற்றும் நையாண்டி கலந்து இப்படம் விமர்சிக்கிறது. பெண்களின் அதிகாரமளித்தலைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

வெவ்வேறு ஜானர்களில் வெளியாகியுள்ள இந்தப் படங்கள், ஓடிடி ரசிகர்களின் இந்த வார விடுமுறையைச் சிறப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

From Around the web