Mask: இந்த வாரம் ரிலீஸாகும் புதிய படங்கள்!.. கவினுக்கு கை கொடுக்குமா மாஸ்க்?!..
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. சில பெரிய நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமையே வெளியாவதும் உண்டு. இந்நிலையில், இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 21ம் தேதி என்னென்ன புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
இந்த வாரத்தை பொறுத்தவரை முதலில் எதிர்பார்ப்பில் இருப்பது கவின், ஆண்ட்ரியா இருவரும் நடித்துள்ள மாஸ்க் திரைப்படம்தான்.இந்த படத்தில் நடித்திருப்பதோடு ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் விகர்னன் அசோக் இயக்கியிருக்கிறார்.
பிளாக் ஹியூமர் காட்சிகளைக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மாஸ்க் உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த இரண்டு படங்கள் கவினுக்கு கை கொடுக்காத நிலையில் மாஸ்க் அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.
அடுத்து ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஆக்சன் திரில்லராக இப்படம உருவாகியிருக்கிறது.

அடுத்து முனீஸ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மிடில் கிளாஸ் திரைப்படமும் வருகிற 21ம் தேதி வெளியாகயுள்ளது குடும்ப காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது, இந்த படத்தை கிஷோர் ராமலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார்.
மேலும் பூர்ணிமா ரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ள எல்லோ (Yellow) என்கிற படமும் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் டெல்லி கணேஷ், வைபவ் முருகேசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
