இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் 2 தமிழ் படங்கள்!

 
Jana Nayagan The India Story

தியேட்டர்களில் வரிசையாக நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த காலம் இப்போது இல்லை. எல்லாம் ஆன்லைனில் புக் பண்ணி முதல் நாள் முதல் ஷோவை பார்த்து விடுகிறார்கள். அப்படி இந்த வாரம் தியேட்டருக்கு சென்று பார்க்க இரண்டு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதன் லிஸ்ட் இதோ...

1.ஜன நாயகன் :

Jana Nayagan

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'ஜன நாயகன்'. இதை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் வாசுதேவ் மேனன், சுனில், நிழல்கள் ரவி, பாபி தியோல், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூலை 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

2.தி இந்தியா ஸ்டோரி :

The India Story

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தி இந்தியா ஸ்டோரி. இதை இயக்குநர் சேட்டன்.டிகே இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஷ்ரேயாஸ் தல்படே, த்ரிஷா சர்தா, அதுல் திவாரி, முரளி ஷர்மா, மனிஷ் வாத்வா, கமலேஷ் சாவந்த், ஷாம் மாஷில்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

From Around the web