Categories: Cinema News latest news

நடிக்க விடாம பண்ணியிருவேன்…! பிரபல நடிகரை மிரட்டிய கேப்டன்..

சினிமா அரசியல் என பன்முக கலைஞராக விளங்கியவர் நடிகர் தியாகு. 80ளில் பல சினிமா படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகர். பொதுவாக துணை நடிகர், வில்லன் நடிகர், போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

சினிமாவிற்கு பின் அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். நம்ம கேப்டன் விஜயகாந்துடன் நெருங்கி பழகுன ஒரே நடிகர் இவர் தான். இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவருக்கும் விஜயகாந்திற்கும் இடையேயான அந்த இணைப்பை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்காக அளித்தார்.

அவர் கூறுகையில் விஜயகாந்த் முன்பெல்லாம் ரொம்பவும் அமைதியாகத்தான் இருப்பாராம். எல்லாரிடமும் பொறுமையாக அமைதியாகத்தான் பேசுவாராம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவரா இப்படினு? அதிசயமா இருந்தது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் பூவே உனக்காக படத்தில் இயக்குனர் விக்ரமன் தியாகுவை நடிக்க அணுகி கமிட் செய்துள்ளார். அந்த சமயம் விஜயகாந்த் இவரை அழைத்து ஒரு சூட்டிங் இருக்கு வா என கூப்பிட தியாகுவோ ஏற்கெனவே நான் இன்னொரு படத்தில் கமிட் ஆகியுள்ளேன் என்று கூறியுள்ளார். உடனே விஜயகாந்த உன்னை அந்த படத்தில் நடிக்க விடாம பண்ணிரவா? என மிரட்டினாராம். தியாகு இங்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விஜயகாந்த் சூட்டிங் கிளம்பிவிட்டாராம். இதை நடிகர் தியாகு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini