×

அந்த 6 நாளும் மோசமான நாட்கள்… புலம்பி தள்ளிய அஸ்வின்!

ஐபிஎல் தொடருக்கு துபாய் சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அங்கு தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களைப் பற்றி புலம்பி தள்ளியுள்ளார்.

 

ஐபிஎல் தொடருக்கு துபாய் சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அங்கு தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களைப் பற்றி புலம்பி தள்ளியுள்ளார்.

இந்தியாவில் மார்ச் மாதமே நடக்கவேண்டிய ஐபிஎல் சீசன் 13 கொரோனா காரணமாக தாமதமாக தற்போது துபாயில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று, கொரொனா வைரஸ் காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் முறையாக டெல்லி அணிக்காக விளையாட உள்ள தமிழகத்தைச் அஸ்வின் இந்த தனிமைப்படுத்தல் நாட்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் ’இந்த 6 தனிமைப்படுத்தும் நாட்களும் என் வாழ்நாளில் மிக மோசமானவ. இந்த  6 நாட்களில் நான் வழக்கத்துக்கு மாறாக 6 மணிநேரம் வரை மொபைல் போன் பயன்படுத்தினேன். என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை. ஆனால் விரைவில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News