திகிலூட்டும் திரில்லர் மர்மங்கள் நிறைந்து.. ஹைப் ஏத்தும் ’அந்த 7 நாட்கள்’
தமிழ் சினிமாவில் புது புது திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் மக்களுக்கு பிடிப்பது என்னவோ இதுவரை அவர்கள் கண்டிராத ஒன்றை பார்த்து எதை ரசிக்குகிறார்களோ அந்தப் படத்திற்கு தான் வரவேற்பு அதிகமாகிறது. வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஏற்ப மக்களின் சினிமா பார்க்கும் முறைகள் மாறி வருகிறது.
இன்றைய காலங்களில் படங்களில் பாடல்கள் இருப்பதே அரிதாகிவிட்டது. கதைக்குத் தேவை என்றால் மட்டுமே பாடல்களை பயன்படுத்துகிறார்கள் இல்லையென்றால் அதுவும் கிடையாது. தமிழ் சினிமாவில் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது புதுமுகங்கள் நடிப்பில் கலக்கலாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ”அந்த 7 நாட்கள்”
இது கே.பாக்கியராஜின் பழைய படத்தின் டைட்டில் போல் இருக்கலாம். அதில் கே பாக்யராஜ் மலையாளி கேரக்டரில் நடித்திருப்பார். தாலி சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் அந்த ஏழு நாட்கள் திரைப்படம் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இதனுடைய கதைகளம் தமிழ் சினிமாவில் இதுவரை எவரும் பார்த்திராத ரொமான்டிக் திரில்லர் கதைகளத்தில் அமைந்திருக்கும். இந்த படத்தில் புதுமுக நடிகர்களாக அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை எம்.சுந்தர் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தை முரளி கபீர் தாஸ் என்பவர் தயாரித்துள்ளாரர். சச்சின் சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரை இசையில் வெளிவந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. காதல் மற்றும் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் கலந்து வரும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும்.
கலர்ஃபுல் காட்சிகள், எமோஷனல் காட்சிகளில் உணர்ச்சி பொங்கும் விதமாக அதிரடி திருப்பங்களுடன் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கிவிட்டனர். புது முகங்களை கொண்டு இயக்குனர் எம்.சுந்தர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படைப்பை வெளியிட தயாராக இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் முத்தமிழன் என்.ராமு வி எப் எக்ஸ் மற்றும் எடிட்டிங் காட்சிகள் படம் வெளியான பிறகு பேசப்படும். இந்த படத்தை முரளி கபீர் தாஸ் தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் ஒரு படத்தை தயாரிப்பதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழக்கமான சினிமாவை காட்டி போர் அடிப்பதைவிட, அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் எதிர்பார்த்து எகிற வைக்கக் கூடிய ஒரு படம் வேண்டுமென்று ஒரு படம் எடுத்திருக்கிறார்.
அதுதான் ”அந்த 7 நாட்கள்”. படம் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இந்த அற்புதமான காதல் நிறைந்த திகிலுட்டும் திரில்லர் திரைப்படத்தை தியேட்டரில் கண்டு மக்கள் ரசிக்கலாம்.
